XIO

xWire

Posts from every feed QUEST has found across the web — blogs, news, podcasts, channels and more.

Latest Business News in Tamil: வணிகம், பைனான்ஸ்/நிதிச் செய்திகள், லேட்டஸ்ட், அப்டேட்டுகள்

Business News in Tamil: வணிகச் செய்திகள் தமிழில், வர்த்தகச் செய்திகள் தமிழ், தமிழ் வர்த்தகச் செய்திகள், பிசினஸ் பற்றிய சமீபத்திய செய்திகள்/ லேட்டஸ்ட் பிசினஸ் செய்திகள் தமிழில்: பங்குச் சந்தை, பொது பங்கு வெளியீடு (அ) ஐபிஓ, எம்.எஸ்.எம்.இ, தனிநபர் நிதி, ஆட்டோ, கிரிப்டோ கரன்சி, விவசாய நலத்திட்டங்கள்…

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. பவுனுக்கு ரூ.2,280 ஏற்றம்.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

சென்னையில் கடந்த இரு நாட்களாகவே தங்கம் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று தங்கம் மீண்டும் புது உயர்வை பதிவு செய்துள்ளது. இன்று 1 கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.285 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல 1 சவரன் தங்கம் விலை ரூ.2,280 வரை உயர்ந்துள்ளது. நேற்று ஏற்றம் பெற்ற வெள்ளி விலை இன்று எவ்வித மாற்றமுமின்றி உள்ளது.

தினம் ரூ.50 சேமித்தால் 50 லட்சத்திற்கும் மேல் ஓய்வூதிய நிதி பெறலாம் : NPS தட்கல் திட்டத்தின் முழு கணக்கீடு

NPS தட்கல் திட்டத்தின் மூலம் சிறு சிறு முதலீட்டின் மூலம் லட்சக்கணக்கில் நிதியை பெற முடியும். தினம் 10 அல்லது 50 ரூபாய் சேமிப்பில் 57 லட்சம் வரை நிதியை பெற முடியும்.அதற்கான முழு கணக்கீடு

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் : 15 ரூபாயில் புதிய 5G அன்லிமிடெட் டேட்டா திட்டம் : நிபந்தனைகள் -நன்மைகள்

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக சூப்பர் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 15 ரூபாயில் அன்லிமிடெட் டேட்டா பேக்கை ஜியோ அறிவித்துள்ளது. இந்த டேட்டா பிளானை பெறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்

தீபாவளிக்கு இந்த 5 பங்குகள் ஹிட் அடிக்கலாம்.. வாங்க கிரீன் சிக்னல் கொடுத்த நுவாமா!

சம்வத் 2083-ல் இந்தியப் பங்குகளின் கண்ணோட்டம் மேம்பட்டு வருவதாக நுவ்மா வெல்த் நம்புகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைக் குறிக்கும் வகையில், நுவ்மா வெல்த் முதலீட்டாளர்களுக்காக ஐந்து பங்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவற்றில் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், கோஃபோர்ஜ், கேடிடிஎல், பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் சைடஸ் லைஃப் சயின்சஸ் ஆகியவை அடங்கும்.

மூத்த குடிமக்கள் FD-க்கு 8.60% வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் – முழு விவரம்!

ஆர்பிஐ ரெப்போ ரேட்டைக் கூட்டுனதைத் தொடர்ந்து, நவம்பர் 2026-ல் கோடக், ஆக்சிஸ், கனரா, சூர்யோதய் மற்றும் உத்கர்ஷ் ஆகிய வங்கிகள் தங்களது எஃப்டி (FD) வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்தியிருக்கு. இதில் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமா 8.60% வட்டி தருது. உத்கர்ஷ் வங்கி 8.50% வரை கொடுக்குது. கனரா, கோடக் மற்றும் ஆக்சிஸ் வங்கிகளும் நல்ல வட்டி ஆஃபர்களை அறிவிச்சிருக்காங்க. உங்க பணத்தை எங்கே முதலீடு செஞ்சா அதிக லாபம் கிடைக்கும்னு முழுசா தெரிஞ்சுக்கோங்க..

யூபிஎஸ் (UPS) புதிய விதி.. தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு என்ன நடக்கும்.. முழு விவரம்!

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (யுபிஎஸ்) கீழ், இடைநிறுத்தக் காலத்தில் ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியப் பங்களிப்புகளைத் தொடரலாம் அல்லது நிறுத்தலாம். ஒரு ஊழியர் பங்களிப்பதை நிறுத்தினால், அரசாங்கத்தின் பங்களிப்பும் நின்றுவிடும்.

மண்ணைக் கவ்விய டிரம்ப்.. உச்சம் தொட்ட தங்கம் விலை.. சென்னையில் கிராமிற்கு ரூ.300 உயர்வு.. வெள்ளி ரூ.10,000 ஏற்றம்!

இன்று நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டு, ஜனநாயகக் கட்சி ஜெயிச்சிருக்கு. இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு குறைஞ்சு, இந்தியாவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 22 கிராம் தங்கம் விலை ரூ.300 உயர்ந்து ரூ.13,300-க்கும், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.210,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

நீதா அம்பானியின் ரூ.15 கோடி தும்பி ப்ரோச்: உலகை ஈர்த்த வைரக் கலைப்படைப்பு!

நீதா அம்பானியின் ஃபேஷன் மற்றும் ஆபரண சேகரிப்பு அடிக்கடி செய்திகளில் இடம்பெடித்து வந்தாலும், இந்த முறை அவருடைய ஒரு ப்ரோச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தும்பி வடிவிலான இந்த ப்ரோச்சின் மதிப்பு சுமார் 12 முதல் 15 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை உருவாக்க வடிவமைப்பாளர் வாலஸ் சாஸுக்கு 10 ஆண்டுகள் ஆனது. வைரங்கள் மற்றும் ரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த ப்ரோச் அழகாக இருப்பது மட்டுமல்லாமல், அதன் வடிவமைப்பிற்குக் பின்னால் உள்ள சிந்தனையும் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

போஸ்ட் ஆபிஸ் கிராம் பிரியா திட்டம் : 14 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுவதற்கான முழு கணக்கீடு

போஸ்ட் ஆபிஸ் கிராம் பிரியா திட்டத்தின் விதிகள் மற்றும் நன்மைகள் என்ன ? இந்த திட்டத்தில் 14 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுவதற்கான முழு கணக்கீடு என்ன ? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்

எலக்சனில் டிரம்ப் பின்னடைவு.. சரசரவென உயர்ந்த தங்கம் விலை.. தீபாவளிக்குள் ரூ.1.80 லட்சம் எட்டுமா.. நிபுணர்கள் சொல்வதென்ன?

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டு, ஜனநாயகக் கட்சி ஜெயிச்சிருக்கு. இதனால டாலர் மதிப்பு குறைஞ்சு, தங்கத்தோட விலை 2% வரை சட்டுனு உயர்ந்திருக்கு. ஆனா, 2026-ன் உச்ச விலையிலிருந்து தங்கம் ஏற்கனவே 22% மேல் குறைஞ்சுதான் இருக்கு! MCX-ல 10 கிராம் தங்கம் ரூ.1,42,471-க்கு வர்த்தகமாகுது. வட்டி விகிதம் உயரும்னு பயம் ஒரு பக்கம் இருந்தாலும், வரப்போற பண்டிகை மற்றும் கல்யாணச் சீசனால் தங்கம் விலை ஏறும்னு எதிர்பார்க்கப்படுது. அடுத்த தன்தேரஸ் 2027-க்குள் தங்கம்…

8-வது ஊதியக் குழு: எப்போ வரும் புது சம்பளம்? ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்னாச்சு? புதிய அப்டேட் உள்ளே!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஜாலியான, அதேசமயம் முக்கியமான அப்டேட்! 8-வது ஊதியக் குழு ஆரம்பிச்சு 2026 நவம்பர் 3-ஓட ஒரு வருஷம் முடிஞ்சிருச்சு பாஸ். கொடுத்த 18 மாசத்துல 12 மாசம் (அதாவது 66% டைம்) முடிஞ்சாச்சு. இன்னும் ஒரு 6 மாசம்தான் பாக்கி இருக்கு. 2027 மே மாசத்துக்குள்ள அறிக்கை வந்துடும்னு எதிர்பார்க்கப்படுது. ஃபிட்மென்ட் ஃபேக்டர், புது சம்பளம், பென்ஷன் உயர்வுனு எல்லாரும் ஆவலா காத்துட்டிருக்காங்க. சீக்கிரமே நல்ல செய்தி வரும்னு எதிர்பார்ப்போம்..

Zerodha வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி : இனி ஐந்தே நிமிடங்களில் 5 லட்சம் வரை எடுக்கலாம் : புதிய விதிகள்

zerodha நிருவனம் வாடிக்கையாளர்களுக்காக ஒரு நற்செய்தியை வழங்கி இருக்கின்றது. அதாவது இன்ஸ்டன்ட் Withdrawal லிமிட்டை இரண்டு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சத்திற்கு அதிகரித்துள்ளது zerodha. இதன் முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்

NPS முதலீட்டாளர்கள் கவனத்திற்கு : டிசம்பர் முதல் வரும் ஓய்வூதிய நிதி மாற்றங்கள் :PFRDA புது விதிகளால் கிடைக்கும் நன்மைகள்

NPS தேசிய ஓய்வூதிய திட்டத்தில் PFRDA சில மாற்றங்களை கொண்டு வருகின்றது. டிசம்பர் 1 முதல் இந்த புது மாற்றங்கள் அமலுக்கு வருகின்றது.அது என்ன மாற்றங்கள் ? முதலீட்டாளர்களுக்கு அதனால் என்ன நன்மை ? என்பதை பார்க்கலாம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு : ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா ? சென்னையில் இன்றைய தங்கம் -வெள்ளி விலை நிலவரங்கள் இதோ

சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரித்து வருகின்றது. நவம்பர் 4 ஆம் தேதியான இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்

அமேசான் மூலம் பொருட்கள் வாங்கும்போது இவ்வளவு சேமிக்கலாமா ? அமேசான் ஃபிரெஷ் vs அமேசான் நவ் சேமிப்பு ரகசியங்கள்

அமேசான் மூலம் மளிகை பொருட்களை வாங்கும் பட்சத்தில் நாம் எவ்வளவு சேமிக்கலாம் ? அமேசான் fresh மற்றும் அமேசான் நவ் இரண்டிற்கும் இருக்கும் வித்யாசங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்வது எந்தளவிற்கு முக்கியம் என்பதை பார்க்கலாம்

PNB, கனரா, ஆக்சிஸ் வங்கிகளின் புதிய FD வட்டி விகிதங்கள் : ரீடெய்ல் vs பல்க் FD வேறுபாடு : முதலீட்டாளர்களுக்கான டிப்ஸ்

ரெப்போ வட்டி விகிதங்களை உயர்த்திய நிலையில் PNB, கனரா மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் தங்களின் FD க்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளன. மேலும் ரீடெய்ல் vs பல்க் FD வேறுபாடுகள் குறித்தும் இங்கு பார்க்கலாம்

தீபாவளிக்கு 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் தட்டுபாடா ? RBI கொடுத்த விளக்கம் : வாடிக்கையாளர்கள் -வியாபாரிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

இந்த பண்டிகை காலத்தில் 10 ,20 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த தகவல்களை மறுத்து RBI அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் இந்த அறிக்கையின் மூலம் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதையும் பார்க்கலாம்

தீபாவளி ஷாப்பிங் பில்லா.. குறைந்தபட்சத் தொகையை மட்டும் கட்டினா 42% வட்டி வலையில மாட்டிப்பீங்க.. இதோ தப்பிக்க 3 வழிகள்!

தீபாவளி பண்டிகைக்குப் பிறகு உங்கள் கடன் அட்டையில் செலுத்த வேண்டிய குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்துவது, 42%க்கும் அதிகமான அதிக வட்டி மற்றும் ஜிஎஸ்டி கட்டணங்களுடன் கூடிய கடன் பொறியில் உங்களைச் சிக்க வைக்கக்கூடும். அதைத் தவிர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தீபாவளி ஸ்பெஷல் Stock Picks.. உங்களுக்கு வருமானம் தரும் 5 பங்குகள் – நிபுணர்கள் கணிப்பு!

சாய்ஸ் இன்ஸ்டிடியூஷனல் என்ற தரகு நிறுவனம், இந்தத் தீபாவளிக்கு வலுவான அடிப்படைகளைக் கொண்ட ஐந்து பங்குகளை வாங்குமாறு பரிந்துரைக்கிறது. இவற்றில் பஜாஜ் கன்ஸ்யூமர் கேர், ஜிஆர்எஸ்இ, ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங், சமாஹி ஹோட்டல்ஸ் மற்றும் ரேட்கெயின் டிராவல் ஆகியவை அடங்கும்.

8th Pay Commission: 2.5, 3 அல்லது 3.5... எந்த Fitment Factor வந்தால் உங்க பென்ஷன் எகிறும்? முழு கணக்கு இதோ!

8வது ஊதியக் குழு 2.5, 3, அல்லது 3.5 என்ற பொருத்தக் காரணியை ஏற்றுக்கொண்டால், தற்போது ரூ.25,000 முதல் ரூ.75,000 வரை அடிப்படை ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய ஓய்வூதியம் என்னவாக இருக்கும்? கணக்கீட்டைப் புரிந்துகொள்வோம்.

WGC சொன்ன குட் நியூஸ்.. தங்கம் வாங்குறது குறைஞ்சிருச்சா? இந்த தீபாவளிக்கு சாமானிய மக்களுக்கு என்ன ஃபைதா?

இந்தியாவில் தங்கத்தின் தேவை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. உலக தங்க நாணய ஆணையத்தின் (WGC) தகவல்படி, செப்டம்பர் காலாண்டில் தேவை 29% சரிந்துள்ளது.

இன்னைக்குத்தான் கடைசி சான்ஸ்.. Coal India பங்குகளை வாங்கினா ரூ.10.25 டிவிடெண்ட் கிடைக்கும்!

கோல் இந்தியா நிறுவனம், 2026-27 நிதியாண்டிற்காக ஒரு பங்குக்கு ரூ.10.25 என்ற இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. இதற்கான பதிவுத் தேதி நவம்பர் 4, 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே சமயம் ஈவுத்தொகை நவம்பர் 27-க்குள் வழங்கப்படும். T+1 தீர்வுமுறையின் கீழ் ஈவுத்தொகையைப் பெறுவதற்காகப் பங்குகளை வாங்குவதற்கான கடைசி நாள் நவம்பர் 3 ஆகும்.

90% லாபம் வந்தும்கூட TN Petro பங்கை உலுக்கும் விற்பனை அழுத்தம்.. முதலீட்டாளர்கள் என்ன செய்யணும்?

வலுவான இரண்டாம் காலாண்டு முடிவுகளின் காரணமாக, தமிழ்நாடு பெட்ரோபுராடக்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஆரம்ப வர்த்தகத்தில் 7% உயர்ந்தன. இருப்பினும், அந்த நிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

இனி Website போகவே தேவையில்லை! WhatsApp-லேயே PF Balance, Passbook-லாம் டவுன்லோட் பண்ணலாம்!

வாட்ஸ்அப்பில் EPF பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்வது எப்படி: EPFO-வின் வாட்ஸ்அப் சேவையானது, PF வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்கவும், கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பெறவும், மற்றும் தங்கள் பாஸ்புக்கைப் பதிவிறக்கம் செய்யவும் அனுமதிக்கிறது. 91 8796441800 என்ற அதிகாரப்பூர்வ எண்ணுக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள் மற்றும் அறியாத எண்களுடன் உங்கள் கணக்குத் தகவலைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.

தீபாவளிக்குமுன் உயரத் தொடங்கிய தங்கம் விலை.. சென்னையில் இன்னைக்கு சவரன் ரேட் என்ன தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், இன்று கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளது. நவம்பர் 3, 2026 சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமிற்கு ரூ.22 உயர்ந்து ரூ.12,800-க்கும், 1 சவரன் தங்கம் விலை ரூ.102,400-க்கும் விற்பனையாகி வருகிறது. இனி இன்றைய நாளுக்கான தங்கம் வெள்ளி விலை நிலவரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

புற்றுநோய் மருந்து விலை 90% வரை சரசரவென சரிவு.. நவம்பர் 9 முதல் நோயாளிகளுக்கு ரூ.3,500 கோடி மிச்சம்!

புற்றுநோய் சிகிச்சைக்கு இனி கைக்காசை அள்ளி இறைக்க வேண்டாம்! மத்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), 543 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் அதிகபட்ச விற்பனை விலையைக் (MRP) கணிசமாகக் குறைச்சிருக்கு. இந்த விலைக் குறைப்பு வரும் நவம்பர் 9 முதல் அமலுக்கு வருது. 137 முக்கியமான அட்டவணைப்படுத்தப்படாத மருந்துகளுக்கு வர்த்தக லாப வரம்பை (Trade Margin Rationalisation) கட்டுப்படுத்தியதால தான் இந்த அதிரடி விலை வீழ்ச்சி.. இதன் மூலம் புற்றுநோயாளிகளுக்கும் அவங்க குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு சுமார்…

மகளுக்கு சேமிப்பு, வரியிலயும் மிச்சம்.. சுகன்யா சம்ரித்தி யோஜனா ரூல்ஸ் இதோ!

உங்கள் மகள்களின் எதிர்காலத்திற்காக சேமிக்க, சுகன்யா சம்ரித்தி யோஜனா ஒரு சிறந்த தேர்வாகும். முதலீடுகள், வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை. பழைய வரி விதிப்பின் கீழ், ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகள் பிரிவு 80C-இன் கீழ் வரி விலக்கு பெறத் தகுதியுடையவை. இந்தக் கணக்கு 21 ஆண்டுகளில் முதிர்வடைகிறது.

வரலாற்றிலேயே செம பெரிய திருட்டு: பைனான்ஸில் ரூ.598 பில்லியன் அவுட்... வடகொரியா மேல சந்தேகம்!

ஹேக்கர்கள் வரலாற்றிலேயே மிகப்பெரிய திருட்டை நிகழ்த்தியுள்ளனர். உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைனான்ஸிலிருந்து 6.3 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ. 598 பில்லியன்) திருடப்பட்டுள்ளது.

மார்க்கெட்ல கல்லா கட்டலாம்... சுமீத் பகடியா சொன்ன டாப் 3 பங்குகள்: சன் பார்மா, இண்டிகோ, இன்ஃபோசிஸ் மிஸ் பண்ணிடாதீங்க!

போன வாரம் நம்ம பங்குச்சந்தை சூப்பரா முடிஞ்சிருக்கு. நிஃப்டி, சென்செக்ஸ் ரெண்டுமே நல்லா ஏறிருக்கு. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் திரும்ப உள்ள காசு போட ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, நிஃப்டி இன்னும் 50-நாள் EMA-வை தாண்டாததால, டக்குனு பெரிய ஏற்றம் வருமானு சொல்ல முடியாது. இந்த நிலைமையில சாய்ஸ் புரோக்கிங் சுமீத் பகடியா திங்கட்கிழமைக்கு மூணு கெத்தான பங்குகளைப் பரிந்துரைச்சிருக்காரு — சன் பார்மா, இண்டிகோ, இன்ஃபோசிஸ். சரியான இலக்கு விலை மற்றும் நஷ்டத்தடை விலையோட வாங்கினா நல்ல லாபம் பார்க்கலாம்.

நவம்பர் 2 இந்த பங்குகள் உங்ககிட்ட இருந்தா ஹோல்ட் பண்ணுங்க.. டிவிடெண்ட் கிடைக்கும் வாய்ப்பிருக்கு!

திங்கட்கிழமை அன்று, நான்கு நிறுவனங்களின் பங்குகள் கவனத்தில் இருக்கும். இந்த நிறுவனங்களில் கோல்கேட்-பால்மோலிவ் (இந்தியா), பிட்டி இன்ஜினியரிங், ரூட் மொபைல் மற்றும் தன்லா பிளாட்ஃபார்ம்ஸ் ஆகியவை அடங்கும். இந்த நிறுவனங்கள் ஒரு பங்குக்கு ரூ.2 முதல் ரூ.24 வரையிலான இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளன .