XIO

xWire

Posts from every feed QUEST has found across the web — blogs, news, podcasts, channels and more.

Latest Business News in Tamil: வணிகம், பைனான்ஸ்/நிதிச் செய்திகள், லேட்டஸ்ட், அப்டேட்டுகள்

Business News in Tamil: வணிகச் செய்திகள் தமிழில், வர்த்தகச் செய்திகள் தமிழ், தமிழ் வர்த்தகச் செய்திகள், பிசினஸ் பற்றிய சமீபத்திய செய்திகள்/ லேட்டஸ்ட் பிசினஸ் செய்திகள் தமிழில்: பங்குச் சந்தை, பொது பங்கு வெளியீடு (அ) ஐபிஓ, எம்.எஸ்.எம்.இ, தனிநபர் நிதி, ஆட்டோ, கிரிப்டோ கரன்சி, விவசாய நலத்திட்டங்கள்…

கனரா வங்கி லாபம் காட்டுனாலும் பங்கு விலை 6% திடீர் சரிவு – இப்போ வாங்கலாமா.. வேண்டாமா.. நிபுணர்கள் சொல்வது என்ன?

கனரா வங்கி தனது 2-வது காலாண்டில் ரூ.5,175 கோடி லாபம் பார்த்து, அசத்தலான ரிசல்ட் வெளியிட்டிருந்தாலும், அக்டோபர் 15 காலை வர்த்தகத்தில் அதன் பங்கு விலை திடீரென 6% மேல் சரிந்து ரூ.116.80-க்கு வந்தது. லாபத்தை வரவு வைக்கும் போட்டாபோட்டியால் (Profit Booking) இந்தச் சரிவு வந்தாலும், பயப்படத் தேவையில்லைனு நிபுணர்கள் சொல்றாங்க. மோதிலால் ஓஸ்வால் மற்றும் எம்கே குளோபல் போன்ற பெரிய நிறுவனங்கள், வங்கி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குனு சொல்லி, இந்தப் பங்கை 'வாங்களாம்' (Buy) எனப் பரிந்துரைக்கிறாங்க.

ரிலையன்ஸ் ஜியோ IPO: ஊழியர்களுக்கு கன்ஃபார்ம் ஆச்சு ரூ. 500 கோடி பங்குகள்!

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் மெகா ஐபிஓ அக்டோபர் 21 முதல் 23 வரை திறக்கிறது; ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு அக்டோபர் 19-ல் ஏலம் நடக்கிறது. இதில் தகுதியான ஊழியர்களுக்கு ரூ. 500 கோடி வரை பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை ஏலம் கோரலாம், ஆரம்ப ஒதுக்கீடு ரூ. 2 லட்சத்தைத் தாண்டாது. மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்களுக்கும் பிரத்யேக ஒதுக்கீடு உண்டு.

ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 78 நாள் தீபாவளி போனஸ் அறிவிப்பு — யாருக்கெல்லாம் கிடைக்கும்?

11.40 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக 78 நாட்கள் போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது மோடி அரசாங்கம். இந்த பண்டிகை காலத்தில், அரசு கெஜட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 11 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் 78 நாட்கள் PLB பெறுவார்கள். ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.17,951 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்

மருத்துவம், கல்வி, திருமணம்... முன்பணம் பெற புதிய விதிகள் வெளியிட்ட EPFO.. முழு விவரம் உள்ளே!

மருத்துவ சிகிச்சை, குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்காக PF முன்பணம் எடுக்க EPFO ​​அனுமதிக்கிறது. உடல்நலக்குறைவுக்காக எடுக்கப்படும் தொகைக்கு வரம்பு இல்லை, அதே சமயம் கல்விக்காக 10 முறையும், திருமணம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்காக அதிகபட்சமாக ஐந்து முறையும் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

6 மாதத்தில் 70% லாபம் கொடுத்த டோலி கன்னா பங்கு... இப்போ வாங்கலாமா, விற்கலாமா?

இந்த பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் பங்கு, கடந்த ஆறு மாதங்களில் என்எஸ்இ-யில் ஒரு பங்கிற்கு சுமார் ரூ.124-லிருந்து ரூ.215 ஆக உயர்ந்துள்ளது, இது 70%-க்கும் அதிகமான லாபமாகும். அவரது செப்டம்பர் காலாண்டு பங்குதாரர் விவரங்களின்படி, டோலி கானா நிறுவனத்தின் 1.72% பங்குகளை, அதாவது 5,798,355 பங்குகளைக் கொண்டுள்ளார்.

TCS பங்குகள் அதிரடி மீட்சி: AI பிசினஸ் தந்த பூஸ்ட்... இப்ப வாங்கலாமா? நிபுணர்கள் கணிப்பு

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பங்குகள் செப்டம்பர் மாதத்தின் குறைந்தபட்ச அளவிலிருந்து கிட்டத்தட்ட 14% மீண்டுள்ளன. நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட 15% உயர்ந்துள்ளதுடன், அதன் செயற்கை நுண்ணறிவு (AI) வணிகத்தின் ஆண்டு வருவாய், மதிப்பிடப்பட்ட $3.1 பில்லியனைத் தாண்டியுள்ளது.

வீட்டில் தங்கம், வெள்ளி எவ்வளவு வைக்கலாம்.. வருமான வரி சோதனைக்கு பயப்படாமல் இருக்க இந்த 4 விதிகளைத் தெரிஞ்சுக்கோங்க!

வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வைத்திருக்க யாருக்குத்தான் பிடிக்காது?.. திருமண நகைகள், பரம்பரை நகைகள் மற்றும் பல ஆண்டுகளாகச் சேகரித்த நகைகள் ஆகியவை பெரும்பாலும் வீட்டிலோ அல்லது வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களிலோ வைக்கப்படுகின்றன. ஆனால், நீங்கள் வீட்டில் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறீர்கள் என்பது பற்றி வருமான வரித்துறை கேள்விகள் கேட்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

மார்க்கெட்டே டல்லா இருந்தாலும் மாஸ் காட்டும் IDBI பேங்க் பங்கு.. அக்டோபர் 17-ல் வரப்போகும் சீக்ரெட் என்ன?

ஐடிபிஐ வங்கியின் பங்குகள் இன்று, அக்டோபர் 14, புதன்கிழமை அன்று கடுமையாக உயர்ந்தன. என்எஸ்இ-யில் காலை நேர வர்த்தகத்தில் அவை 13% வரை உயர்ந்தன. சந்தை நிலவரம் பலவீனமாக இருந்தபோதிலும், வங்கியின் பங்குகளை மக்கள் வாங்கினர். முந்தைய நாள் முடிவில் ரூ.82.94 ஆக இருந்த பங்கின் விலை, ரூ.84.80-ல் தொடங்கி, கிட்டத்தட்ட 13% உயர்ந்து, அன்றைய வர்த்தகத்தில் ரூ.93.60 என்ற உச்சத்தை எட்டியது.

இந்தியாவில் அதிகரிக்கும் 3 ஆன்லைன் மோசடிகள் : பாதிக்கப்பட்ட 67 % பேருக்கு பணம் கிடைக்கவில்லையா ? ஆய்வு முடிவுகளால் அதிர்ச்சி

இந்தியாவில் இந்த மூன்று வகையில் தான் அதிகமாக ஆன்லைன் மோசடிகள் நடப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் GSMA India Consumer Scam Report 2026 ஆய்வு முடிவுகள் இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது

தங்கம் விலை மீண்டும் சரிவு : இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை என்ன தெரியுமா ? வெளியான விலை நிலவரங்கள்

நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில் இன்றும் ஒரு ஆபரணம் மற்றும் தூய தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை காணலாம்

கார் வாங்குவதோடு முதலீடு செய்து லாபத்தையும் பெறலாம் : உங்களுக்கான ஹைபிரிட் ஃபார்முலா இதோ

நம் கையில் இருக்கும் மொத்த தொகையை கொடுத்து கார் வாங்குவது சிறந்ததா ? அல்லது முன்பணத்தை கொடுத்து கடன் வாங்கி கார் வாங்குவதும் மீதமுள்ள பணத்தை முதலீடு செய்வதும் சிறந்ததா ? என்ற கணக்கீட்டை பார்க்கலாம்

அக்டோபர் 19 ஆம் தேதி அறிமுகமாகும் LIC யின் 3 புதிய பிளான்களின் முழு விவரங்கள்

LIC தற்போது மூன்று புதிய திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி முதல் இந்த திட்டங்கள் அறிமுகமாகும் நிலையில் இத்திட்டங்கள் குறித்து முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்

PPF கணக்கு விவகாரம் :12 ஆண்டுகளுக்கு பின் கணக்கு தவறு என அறிவிப்பு : வட்டி கிடைக்குமா ?: நீதிமன்றம் தீர்ப்பு

பெங்களூரை சேர்ந்த ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக PPF கணக்கில் பணம் செலுத்தி வந்த நிலையில் அந்த கணக்கு செல்லாது என தபால் நிலையம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து அந்த முதலீட்டாளர் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பார்க்கலாம்

LTCG வரியில் மாற்றமா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்த பரபரப்பு அப்டேட்!

நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) மற்றும் பத்திரப் பரிவர்த்தனை வரி (STT) குறித்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட நாட்களாகத் தெரிவித்து வரும் கோரிக்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியக் குறிப்பு ஒன்றை வழக்கியுள்ளார்.

டாலருக்கு எதிராக கலக்கும் ரூபாய்.. ஆர்பிஐ-யின் மாஸ்டர் பிளான் ஒர்க்அவுட்... கலக்கலான 5 காரணங்கள்!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, டாலருக்கு எதிராக ரூபாய் வலுப்பெற்றது. தொடர்ந்து மூன்றாவது நாளாக டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் உயர்வுடன் நிறைவடைந்தது. செவ்வாயன்று, ஒரு டாலருக்கு 50 பைசா அதிகரித்து 95.28 என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது.

அக்டோபர் 15 UPI கட்டணம் கேன்சலா? தீபாவளி வரை நோ எக்ஸ்ட்ரா சார்ஜ்... என்பிசிஐ வெளியிட்ட முக்கிய தகவல்!

UPI-யில் MDR ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீபாவளி வரை பணம் செலுத்துவது இலவசமாகவே தொடரும், ஆனால் செயல்படுத்தும் தேதி பின்னர் முடிவு செய்யப்படும்.

LIC ஜீவன் லக்ஷ்யா திட்டம் : 10 லட்சம் காப்பீட்டிற்கு 1 லட்சம்ஆண்டு வருமானம் : குடும்பத்தை பாதுகாப்பதற்கான கணக்கீடு

LIC ஜீவன் லக்ஷ்யா திட்டத்தில் 10 லட்சம் காப்பீட்டிற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் வருமானம் பெறுவதற்கான கணக்கீடு மற்றும் LIC ஜீவன் லக்ஷ்யா திட்டத்தின் முழு நன்மைகள் என்ன என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்

இ-காமர்ஸ் சலுகைகளின் பின்னணியில் இருக்கும் தந்திரங்களும் தப்பிக்கும் வழிகளும்

பண்டிகை காலங்களில் இ-காமர்ஸ் சலுகைகள் உண்மைதானா ? வாடிக்கையாளர்களை பொருட்களை வாங்க வைக்க அவர்கள் என்னென்ன தந்திரங்களை பின்பற்றுகின்றனர் ? அதிலிருந்து நாம் தப்பிக்கும் வழிகள் என்ன ? என்பதை பார்க்கலாம்

மாதம் 30 % லாபமா ? ஆன்லைன் முதலீட்டு மோசடிகளில் சிக்காமல் இருக்க SBI யின் முக்கியமான ஆலோசனைகள்

முதலீட்டாளர்களை ஆன்லைன் மோசடிக்காரர்கள் எவ்வாறு ஏமாற்றுகின்றனர் ? அவர்களின் பொய்யான வாக்குறுதிகளை கண்டறிவது எப்படி ? நம்மை ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிகளை SBI வழங்குகின்றது

Zoho சம்பள உயர்வு ரத்திற்கான காரணங்கள் : IT ஊழியர்கள் தப்பிக்க 4 வழிகள் : ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் தொழில்நுட வேலைகளுக்கான எதிர்காலம் குறித்தும் ஊழியர்களை எச்சரித்து இருக்கின்றார் ஸ்ரீதர் வேம்பு

தெளிவான காரணமின்றி மீண்டும் மீண்டும் உங்கள் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறதா? TOI Money மூலம் வெறும் 10 நிமிடங்களில் ₹25 லட்சம் வரை கடன் பெறுங்கள்!

undefined