Latest Business News in Tamil: வணிகம், பைனான்ஸ்/நிதிச் செய்திகள், லேட்டஸ்ட், அப்டேட்டுகள்
Business News in Tamil: வணிகச் செய்திகள் தமிழில், வர்த்தகச் செய்திகள் தமிழ், தமிழ் வர்த்தகச் செய்திகள், பிசினஸ் பற்றிய சமீபத்திய செய்திகள்/ லேட்டஸ்ட் பிசினஸ் செய்திகள் தமிழில்: பங்குச் சந்தை, பொது பங்கு வெளியீடு (அ) ஐபிஓ, எம்.எஸ்.எம்.இ, தனிநபர் நிதி, ஆட்டோ, கிரிப்டோ கரன்சி, விவசாய நலத்திட்டங்கள்…
தங்கம் விலை அப்படியே சரிஞ்சுட்டே போகுது... இன்னும் குறையுமா இல்ல ஏறுமா? என்னதான் நடக்குது மார்க்கெட்ல?
கடந்த வாரத்துல தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுன்னு இறங்கிடுச்சுங்க. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, தங்கம் ஒரே வாரத்துல கிட்டத்தட்ட 4% வரைக்கும் சரிஞ்சிருக்கு. அமெரிக்க வட்டி விகிதம் ஏறலாம்னு சொல்றது, டாலர் மதிப்பு கூடினது, கச்சா எண்ணெய் விலை விவகாரம் மற்றும் டொனால்ட் டிரம்பின் பேச்சு இதற்கெல்லாம் முக்கியக் காரணங்கள். ஆனா, தங்கம் இப்போ 'அதிகப்படியான விற்பனை' (Oversold) நிலைக்கு வந்துட்டதால, ரொம்பவும் குறையாம ஒரு குறிப்பிட்ட இடத்துல தாக்குப் பிடிக்கும்னு நிபுணர்கள் நம்புறாங்க.

ஆந்திராவுக்கு அடிச்சது ஜாக்பாட்.. முகேஷ் அம்பானியின் ரூ.43,000 கோடியில் ரிலையன்ஸ் போடும் மெகா பிளான்... 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு ரெடி!
ஆந்திரப் பிரதேசத்தில் நிலக்கரி மூலம் எரிவாயு தயாரிக்கும் பிரம்மாண்ட ஆலையை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது. முதற்கட்டமாக ரூ.43,000 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்தத் திட்டம், அடுத்த 30 ஆண்டுகளில் ரூ.2.70 லட்சம் கோடி வரை விரிவடைய வாய்ப்புள்ளது. இதற்காக ஆந்திர அரசுடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் போடவுள்ளது. இந்தத் திட்டத்தால் 5,000 நேரடி வேலைவாய்ப்புகளும், 35,000 மறைமுக வேலைவாய்ப்புகளும் என மொத்தம் 40,000 பேருக்கு வேலை கிடைக்கும். ஏலூர் மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் மூலம்…

ரேகா ஜுன்ஜுன்வாலா பங்கிற்குப் பெரிய அடி.. ரூ.2,400 கோடி சவுதி ப்ராஜெக்ட் கேன்சல் - திங்கட்கிழமை பங்கு விலை சரியுமா?
ரேகா ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ள வி.ஏ. டெக் வபாக் (VA Tech Wabag) நிறுவனத்தின் ரூ.2,400 கோடி மதிப்பிலான சவுதி கடல்நீர் சுத்திகரிப்புத் திட்டத்தை, சவுதி நீர் ஆணையம் உள் காரணங்களுக்காக ரத்து செய்துள்ளது. வெள்ளிக்கிழமை 2% சரிந்த இந்தப் பங்கு, திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெரும் கவனத்தைப் பெறும். இருப்பினும், இரண்டாம் காலாண்டில் ரூ.104 கோடி லாபமும், ரூ.20,000 கோடிக்கும் மேலான வலுவான ஆர்டர் புத்தகமும் இந்நிறுவனத்திற்கு உள்ளது. இதனால், மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் இந்தப் பங்கிற்கு ரூ.2,529 இலக்கு…

உலகம் முழுக்க இனி நம்ம ஊர் நெய் ரோஸ்ட்டும், மைசூர் பாக்கும் தான்! 180 மில்லியன் டாலருக்கு பெரும்பான்மைப் பங்குகளை விற்ற A2B!
நம்ம ஊர் அடையார் ஆனந்த பவன் (A2B), தன்னோட பெரும்பான்மைப் பங்குகளை 180 மில்லியன் டாலருக்கு ‘போதி ட்ரீ சிஸ்டம்ஸ்’ (Bodhi Tree Systems) நிறுவனத்துக்கு வித்திருக்கு. ஜேம்ஸ் முர்டோக் மற்றும் உதய் சங்கர் ஆதரவு பெற்ற இந்த முதலீட்டு நிறுவனம், A2B-யை உலகளாவிய இந்திய உணவு பிராண்டா மாத்தப் போகுது. இந்த டீல் மூலமா உதய் சங்கர் A2B-யோட சேர்மனா பொறுப்பேற்கப் போறாரு. சீக்கிரமே A2B பங்குச் சந்தையில (IPO) கால் பதிக்கவும், உலகம் முழுக்க கிளைகளை விரிவுபடுத்தவும் இந்தக் கூட்டணி வழிவகுக்கும்னு அறிவிச்சிருக்காங்க.

இறங்குன வேகத்துல ஏறப் போகும் HAL.. டார்கெட் விலையை 28% உயர்த்திய சிட்டி.. வாங்க இது சரியான நேரமா?
HAL பங்குகள் சமீபத்தில் பலவீனமடைந்துள்ளன, ஆனால் சிட்டி தனது 'வாங்கலாம்' என்ற மதிப்பீட்டையும் ரூ. 6,175 என்ற இலக்கு விலையையும் தக்கவைத்துள்ளது. இது சுமார் 28% வரை விலை உயர்வதற்கான சாத்தியத்தைக் குறிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் HAL பங்குகள் சுமார் 600% வருமானத்தை அளித்துள்ளன.

சந்தை மந்தமாக இருந்தால் என்ன.. நவம்பர் 16 இந்த 3 பங்குகள் எகிறப் போவது உறுதி.. வாங்கப் பரிந்துரைக்கும் சுமீத் பகடியா!
அடுத்த வாரப் பங்குச் சந்தையில் பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் நெஸ்லே இந்தியா ஆகிய பங்குகளை வாங்குமாறு சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தைச் சேர்ந்த சுமீத் பகடியா பரிந்துரைக்கிறார். மேலும், இந்த மூன்று பங்குகளுக்குமான வாங்கும் நிலைகள், இலக்கு விலைகள் மற்றும் ஸ்டாப் லாஸ் விலைகளையும் வழங்கியுள்ளார்.

குழந்தைகள் தின ஸ்பெஷல் : பாக்கெட் மணி சேமிப்பு -பங்குசந்தை முதலீடு வரை : NCERT யின் புதிய பாடத்திட்டம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு NCERT புது பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் குழந்தைகள் பள்ளி பருவத்தில் இருந்தே நிதிநிலை குறித்தான அறிவை பெறலாம். இந்த பாடத்திட்டத்தின் மூலம் குழந்தைகள் பெரும் பயன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்

வட்டி விகிதங்கள் உயரும்போது எந்த Debt Fund பாதுகாப்பானது ? குறுகிய vs நீண்ட கால கடன் நிதிகளின் முழு ஒப்பீடு
மாநிலங்களில் அதிகரித்து வரும் கடன் மற்றும் 8th ஊதிய குழு போன்ற செலவு அழுத்தங்கள் காரணமாக நீண்ட கால மாநில பத்திரங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே மாநில மேம்பாட்டு கடன்களில் இருந்து (SDLs ) விலகியே இருக்க வேண்டும்

தங்கம் விலை இறங்குமுகம் :பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா ? இன்றைய தங்கம் -வெள்ளி விலை விவரம்
நவம்பர் 14 ஆம் தேதி சென்னையில் தங்கத்தின் விலை குறைந்திருக்கும் நிலையில் அது சவரனுக்கு மற்றும் கிராமிற்கு எவ்வளவு குறைந்துள்ளது ? வெள்ளியின் விலை நிலவரம் என்ன ? என்ற முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்

வங்கிகள் போட்டிபோட்டு ஸ்பெஷல் FD வட்டியை உயர்த்துவதற்கான காரணங்கள் : முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
வங்கிகள் ஸ்பெஷல் FD வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான காரணம் என்ன ? முதலீட்டாளர்கள் FD யில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன ?என்பதை பார்க்கலாம்

உங்களுடைய ஆதார் எங்கே பயன்படுத்தப்படுகிறது ? UIDAI இலவச சேவை மூலம் கண்டறியும் முறை: மோசடியிலிருந்து பாதுகாக்கும் வழிகள்
உங்களுடைய ஆதார் கார்டு எவ்வாறு எப்படி பயன்படுத்தப்படுகின்றது என்பதை கண்டறிய UIDAI ஒரு இலவச சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்

EPFO முக்கிய அறிவிப்பு :நவம்பர் 15 க்குள் நிறுவனங்கள் PF டெபாசிட் செய்ய வேண்டும் : ஊழியர்கள் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயம்
EPFO ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. அதன்படி நிறுவனங்கள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் PF டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், ஊழியர்கள் அதனை சரிபார்க்க வேண்டும் எனவும் EPFO வலியுறுத்தி இருக்கின்றது

2027-இல் தங்கம், வெள்ளி விலை ராக்கெட் வேகத்தில் பறக்கப் போகுது.. இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் அதிரடி!
தங்கம், வெள்ளி விலை இப்போ கொஞ்சம் இறங்கி இருந்தாலும், அடுத்த வருஷம் அதாவது 2027-க்குள் செம மாஸா உயரப் போகுதுனு இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் (IBJA) அடிச்சுச் சொல்லுது. சுரேந்திர மேத்தா சொல்றபடி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் $6,200 டாலராகவும், வெள்ளி $180 டாலராகவும் எகிறலாம். இது இந்திய மதிப்பில், 10 கிராம் தங்கம் ரூ.1.87 லட்சத்தைத் தாண்டியும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,45,100 வரையிலும் உயர வாய்ப்பிருக்கு. அமெரிக்க வட்டி விகிதம் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தால இப்போ விலை…

பேடிஎம்-க்கு அடிச்சது ஜாக்பாட்.. மீண்டும் வருது பழைய வாலட் சேவை... ஆனா ஆர்பிஐ போட்ட ஒரு செக்!
கடந்த சில காலமாகப் பல சவால்களைச் சந்தித்து வந்த பேடிஎம் (Paytm) நிறுவனத்திற்கு இப்போது ஒரு செம குட் நியூஸ் கிடைச்சிருக்கு. பேடிஎம்-இன் துணை நிறுவனமான பிபிஎஸ்எல் (PPSL), மீண்டும் டிஜிட்டல் வாலட் சேவையைத் தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியிருக்கு. இதனால பேடிஎம் பங்குதாரர்களும், வாடிக்கையாளர்களும் செம ஹாப்பியா இருக்காங்க. ஆனா, இன்னைக்கே வாலட் சேவை தொடங்கிடுமான்னு கேட்டா, இல்லை. இறுதி உரிமம் கிடைக்க ஆர்பிஐ ஒரு 6 மாச கெடு விதிச்சிருக்கு. அதுக்குள்ள சைபர் பாதுகாப்புத்…

வங்கியில பணம் சும்மா இருக்கா? உங்களோட சேமிப்புக்கு இப்போ கிடைக்கப் போகுது டபுள் லாபம்!
ஸ்வீப்-இன் நிலையான வைப்புத்தொகைகள் (Sweep-in FDs) என்பவை சேமிப்புக் கணக்குகளின் ஒரு அம்சமாகும். இது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேலான வைப்புத்தொகையைத் தானாகவே நிலையான வைப்புத்தொகைகளுக்கு மாற்றுகிறது. இது நிலையான வைப்புத்தொகைக்கு அதிக வட்டியைப் பெற வழிவகுக்கிறது. தேவைப்படும்போது, நிலையான வைப்புத்தொகையிலிருந்து சேமிப்புக் கணக்குகளுக்கு நிதி திருப்பி அனுப்பப்பட்டு, ரொக்கப் பணம் கிடைப்பதை உறுதி செய்கிறது.

தடாலடியாக சரிந்த தங்கம் விலை... பதறிப்போய் SIP-ஐ நிறுத்திய லட்சக்கணக்கான மக்கள்.. இப்போ என்னதான் பண்றது?
தீபாவளிக்கு விண்ணைத் தொட்ட தங்கம் விலை, இன்று ஒரே நாளில் ரூ.2,810 அதிரடியாகக் குறைஞ்சிருக்கு. இதனால நகை வாங்குறவங்க செம குஷியில இருக்காங்க. ஆனா, இன்னொரு பக்கம் பங்குச்சந்தை ஆட்டம் காரணமா, மியூச்சுவல் ஃபண்ட்ல மாசா மாசம் பணம் போடுற SIP முதலீடுகளைப் பலரும் பயந்துபோய் நிறுத்திட்டாங்க. அக்டோபர் 2026-ல புதுசா SIP தொடங்குறவங்களை விட, பாதியிலேயே நிறுத்துறவங்க எண்ணிக்கை 116.7 சதவீதமா எகிறியிருக்கு. இந்த நேரத்துல முதலீட்டாளர்கள் பதற்றப்படாம, தொடர்ந்து SIP-ல பணம் போடுறதும், விலை குறைஞ்சிருக்கிற தங்கத்தை…

முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. ஒரு பங்குக்கு ரூ.20 டிவிடெண்ட் அறிவித்த மல்டிபேக்கர் நிறுவனம்... Record தேதி எப்போ தெரியுமா?
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இங்கர்சால்-ராண்ட் (இந்தியா) நிறுவனம் ஒரு சூப்பர் குட் நியூஸ் சொல்லியிருக்கு. செப்டம்பர் காலாண்டு லாபம் அதிகரித்ததைத் தொடர்ந்து, 2026-27 நிதியாண்டுக்கு ஒரு பங்குக்கு ரூ.20 இடைக்கால டிவிடெண்ட் அறிவிச்சிருக்காங்க. இது பங்கின் முகமதிப்புல 200% லாபம்! இந்த டிவிடெண்ட் பணத்தைப் பெற நவம்பர் 19, 2026 ரெக்கார்ட் தேதியா அறிவிக்கப்பட்டிருக்கு. டிசம்பர் 2-ம் தேதி வங்கிக் கணக்குல பணம் வந்து சேரும். நீண்ட கால முதலீட்டாளர்களுக்குப் பல மடங்கு லாபம் கொடுத்த இந்தப் பங்கு, இப்போ…

தங்கம், வெள்ளி ரேட் திடீர் ட்விஸ்ட்.. ரூ.1.80 லட்சத்தைத் தொடும் வெள்ளி – இப்போ வாங்கலாமா, கொஞ்சம் வெயிட் பண்ணலாமா?
கடந்த சில நாட்களாகச் சரிந்துகொண்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று காலையில் சற்று மூச்சு விட்டு, லேசாக ஏறத் தொடங்கியுள்ளது. எம்.சி.எக்ஸ் (MCX) சந்தையில் 10 கிராம் தங்கம் ₹1.37 லட்சத்தைத் தாண்டியுள்ளது; வெள்ளி கிலோ ரூ.1.80 லட்சத்தை நெருங்கியுள்ளது. விலை குறைந்ததால் முதலீட்டாளர்கள் ஆர்வமாக வாங்கியதே இந்தத் திடீர் ஏற்றத்திற்குக் காரணம். ஆனால், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதால், இந்த ஏற்றம் நிரந்தரமா என்பதில் சந்தேகம் உள்ளது. எனவே, அவசரப்படாமல் கொஞ்சம் கவனித்து…

பென்ஷன் வாங்குறவங்களுக்கு சூப்பர் நியூஸ்.. இனி பேங்க் வாசல்ல நிக்க வேணாம்... வீட்டுல இருந்தபடியே 1 நிமிஷத்துல ஆயுள் சான்றிதழ் எடுக்கலாம்!
பென்ஷன் வாங்குறவங்க வருஷா வருஷம் ஆயுள் சான்றிதழ் (Life Certificate) கொடுக்குறது ரொம்ப முக்கியம். இதுக்கு நவம்பர் 30-ஆம் தேதி தான் கடைசி நாள். இனி இதுக்காக பேங்க் இல்லன்னா ஆபீஸ் வாசல்ல போய் மணிக்கணக்குல காத்துட்டு இருக்க வேண்டிய அவசியமே இல்ல. உங்க கையில இருக்குற ஸ்மார்ட்போன்ல UMANG செயலியை டவுன்லோட் பண்ணி, வீட்டுல இருந்தபடியே வெறும் ஒரு நிமிஷத்துல டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை ஈஸியா உருவாக்கிடலாம். இது நேரடியா பென்ஷன் ஆபீஸுக்குப் போயிடும், பேங்குக்கு போகவே தேவையில்லை.

சேமிப்பிற்கு பாதிப்பு இல்லாமல் 7 லட்சம் கடனை குறுகிய காலத்திற்குள் அடைக்கும் 5 ஸ்டேப் ஃபார்முலா
உங்களிடம் ஏழு லட்சம் கடன் இருந்தால் அதனை ஆறு மாதத்திற்குள் அடைப்பதற்கான வழிகள் என்ன ? சேமிப்பை உடைக்காமல் வேறு கடன் வாங்காமல் ஏழு லட்சம் கடன்சி குறுகிய காலத்திற்குள் அடைப்பதற்கான வழிகள் குறித்து பார்க்கலாம்

என்விடியாவுக்கு விழுந்த பெரிய அடி: சிஇஓ விலகலால் பங்குச் சந்தையில் பரபரப்பு.. ஏஎம்டி, பிராட்காம் பங்குகளை இப்போ வாங்கலாமா?
ஏஐ (AI) உலகின் ராஜாவாக வலம் வந்த என்விடியா (NVIDIA) நிறுவனத்திற்குப் பெரிய சறுக்கல்! சீன சர்ச்சைகள் காரணமாக சிஇஓ ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதால், அந்நிறுவனப் பங்குகள் ஒரே மாதத்தில் 26% சரிந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு, ஏஎம்டி (AMD), பிராட்காம் (Broadcom) போன்ற போட்டி நிறுவனங்களின் பங்குகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். குறுகிய காலத்தில் போட்டி நிறுவனங்களுக்கு இது ஜாக்பாட் என்றாலும், நீண்ட கால அடிப்படையில் தொழில்நுட்ப பலத்தால் என்விடியா மீண்டும் பழைய…

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சேமிப்பை கற்றுக்கொடுக்கும் 3-ஜார் ஃபார்முலா : பெற்றோர்கள் கவனத்திற்கு
குழந்தைகள் தினம் கொண்டாட பட இருக்கும் நிலையில் குழந்தைகளுக்கு சேமிப்பை கற்றுக்கொடுக்கும் 3 ஜார் பார்முலா மற்றும் வயதிற்கு ஏற்ப குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்

போஸ்ட் ஆபிஸ் SCSS vs MIS : ரூ.12 லட்சம் முதலீட்டிற்கு எவ்வளவு கிடைக்கும் ? மூத்த குடிமக்களுக்கான கணக்கீடு
உங்களுக்கு 60 வயது குறைவாக இருந்தாலோ SCSS யின் 30 லட்சம் வரம்பை ஏற்கனவே பூர்த்தி செய்திருந்தாலோ, ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பெற நினைத்தாளோ MIS திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்

தொடர்ந்து நான்காவது நாளாக குறைந்த தங்கம் :வெள்ளியின் விலையிலும் சரிவு : முழு விவரம்
சென்னையில் நவம்பர் 13 ஆம் தேதியை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மட்டும் வெள்ளியின் விலை விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்

SIP யில் 10 ஆண்டுகளில் 80 லட்சம் சேர்க்க வேண்டுமா ? அதற்கான கணக்கீடு இதோ
SIP யில் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக 10 ஆண்டுகளில் 80 லட்சம் நிதியை சேர்க்க வேண்டுமென்றால் அதற்கான பார்முலா மற்றும் கணக்கீடு என்ன ? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

ஜியோவின் ரூ.10,000 vs 3,599 vs 3,999 பிளான்கள் : உங்களுக்கு எது பெஸ்ட் ?லாப கணக்கீடு -ஒப்பீடு
ஜியோ தற்போது ரூ.10000 பிளானை அறிமுகம் செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பிளான் எது ? 10,000 vs 3,599 vs 3,999 பிளான்களில் நல்ல லாபம் தரும் பிளான் எது ? என்ற கணக்கீட்டை தற்போது பார்க்கலாம்

மூத்த குடிமக்களுக்கான FD வட்டியை உயர்த்திய ஃபெடரல் வங்கி : 10 லட்சம் முதலீட்டிற்கு 35 மாதங்களில் எவ்வளவு கிடைக்கும் என்பதற்கான கணக்கீடு
ஃபெடரல் வங்கி மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதங்களை உயர்த்தியது. இதன் மூலம் பத்து லட்சம் முதலீடு செய்தால் 35 மாதங்களில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்ற முழு கணக்கீட்டை தற்போது பார்க்கலாம்

சில்லறைப் பணவீக்கம் 6.09% ஆக உயர்வு: ரிசர்வ் வங்கியின் உச்சக் கோட்டைத் தாண்டிய விலைவாசியால் சாமானியர்கள் தவிப்பு!
நாட்டில் சில்லறைப் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 6.09 சதவீதமாக உயர்ந்து, ரிசர்வ் வங்கியின் 6% என்ற அபாயக் கோட்டைத் தாண்டியிருக்கு. கடந்த இரண்டு வருஷத்துல இப்படி நடக்குறது இதுதான் முதல் முறை. வெங்காயம், பூண்டு, இஞ்சி, பால் பொருட்கள் விலை எகிறுனதும், மத்திய கிழக்குப் பதட்டத்தால கச்சா எண்ணெய் விலை கூடுனதும் தான் இதுக்கு முக்கியக் காரணம். இதனால நடுத்தரக் குடும்பங்களோட மாதாந்திர பட்ஜெட் ஆட்டம் காணுது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துமாங்குற எதிர்பார்ப்பும் இப்போ எகிறியிருக்கு.

DINK தம்பதிகள் என்றால் என்ன ? இந்த கலாச்சாரத்தின் நன்மைகள் -குறைகள் : முழு விளக்கம்
இந்தியாவில் தற்போது DINK கலாச்சாரம் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகின்றது. DINK கலாச்சாரம் என்றால் என்ன ? என்ற விளக்கத்தையும் அதன் நன்மை மற்றும் குறைபாடுகளையும் விரிவாக பார்க்கலாம்

